மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. காலை வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 3000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தலைவர் சுகுமார், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் , பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்ரேகா ராமச்சந்திரன், முத்துக்குமரன் நகை மாளிகை வீரப்பன் என்றராஜா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 13ம்நாள் மண்டகப்படியையொட்டி வடக்கு ரத வீதிவேளாளர் வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan June 14, 2025, 2:48 pm




You must be logged in to post a comment.