17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!

18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!

எழுதியவர்: Baker BAker June 14, 2025, 12:54 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், இபுறாஹிம் முஹம்மது முபாரக் ஆகியோர் தலைமையில் காதர் சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தனர். மன்சூர் ஆலிம்  சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களிடையே கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து இடையூறை சரி செய்தல் விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் இளைஞர்களை கலந்து கொள்ள ஊக்குவித்தல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து

சமூக சேவையாளர் விருது காதர் சாஹிப் என்பவருக்கும் , சிறந்த சேவையாளர் விருது முஹம்மது சுஹைப் என்பவருக்கும் ,கண்ணியமிகு காயிதே மில்லத் விருது சீனி முஹம்மது என்பவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியில் குதுபுதீன் ராஜா நன்றி உரையாற்றி அப்துல் ரவுஃப் ஆலிம் இறை வசனம் ஓதி நிறைவு பெற்றது. இதில் 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!