17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!

குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!

எழுதியவர்: Baker BAker June 13, 2025, 10:49 pm

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார்.  

 

 

 உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் முனைவர் ராம்குமார் 

வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்தும் பேசினர்.

 

 

வேளாண் உதவி அலுவலர் சரிதா , தோட்டக்கலை துணை அலுவலர் தங்கவேல் ஆகியோர் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண் வணிகத் துறை மற்றும் தோட்டக்கலை நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு கூறினார், நிகழ்ச்சியில் உச்சிப்புளி வட்டார உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர், ஆத்மா திட்ட பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர் .

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!