17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பள்ளியில் பள்ளி குழந்தைகளின் இரத்த வகை கண்டறியும் முகாம் 

உசிலம்பட்டியில் பள்ளியில் பள்ளி குழந்தைகளின் இரத்த வகை கண்டறியும் முகாம் 

எழுதியவர்: mohan June 13, 2025, 10:54 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளின் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டறியும்a பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாணவர்களின் இரத்த வகை இலவசமாக கண்டறியப்பட்டு அரசின் கல்வி இணையதளத்தில் பதியப்பட்டது. மேலும் ரத்தம் எந்த வகை என்று மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் இரத்த வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாகவும், எதிர்காலத்தில் இரத்ததான முகாம் போன்ற சமூகப்பணியில் ஈடுபடுவதற்கு உறுதுணையாகவும் இருக்கும் என பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு தெரிவித்தார்.இந் நிகழ்ச்சி ஏற்பட்டினை உசிலம்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் உசிலை எக்ஸ்ரே டிஜிட்டல் லேப் இணைந்து நடத்தியது. பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!