17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் அனைத்து கட்சி கூட்டம்

தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் அனைத்து கட்சி கூட்டம்

எழுதியவர்: mohan June 12, 2025, 3:59 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள மஹாலில் அனைத்து கட்சி கூட்டம் தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்றது.

தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜா பாண்டியன் தலைமையில் பொது செயலாளர் பூபதி ராஜா முன்னிலையில் கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கைரேகை சட்டத்தை கண்டித்து போராடிய போராளிகள் உயிர் தியாகத்தால் பிரிட்டிஷ் அரசு கள்ளர் சீரமைப்புத் துறையை உருவாக்கி இன்று வரை கள்ளர் சமுதாயம் கல்வி தொழில் விவசாயம் என பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். உயிர் தியாகம் செய்த வீர தியாகிகளுக்கு இக்கூட்டம் பாராட்டி இதய அஞ்சலி செலுத்துகின்றது. அரசு கள்ளர் சீரமைப்புத் துறையைச் சேர்ந்த பள்ளிக்கூடங்கள் மாணவ மாணவியர் விடுதிகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் சொத்துக்களை அரசு தவறான முறையில் கையகப்படுத்துவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. கோவில் மானிய நிலத்தை பிரமலைக்கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறையாக பாதுகாத்து வந்த நிலத்தை கோவில் மானியத்தை பிற்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி போலியான நபர்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்தும் கோவில் மானிய நிலத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த பிரமலை கள்ளர் சமுதாயத்தினரின் குடும்பங்களுக்கு மீண்டும் சிக்கம்பட்டி கிராமம் இடத்தை பகிர்ந்து வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது. போன்ற தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவு செய்யப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி .ஐயப்பன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் கள்ளநாடு அறக்கட்டளை தலைவர் வல்லாளத் தேவன் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கோ ராமநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பிரமலைக் கள்ளர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!