18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்

எழுதியவர்: mohan June 12, 2025, 9:34 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார்.அங்கிருந்து புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக மந்தைக் களத்தில் அமைக்கப்பட்டிருந்தபூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தனர் முன்னதாக ஜனவரி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தது பின்னர் மந்தை களத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே மண்டகப் படித்தார்களுக்கு மரியாதை செய்யப்பட்டது . பின்னர் பம்பையுடன்கோவில் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்தை சுமந்து பூக்குழி இறங்கினார்.இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டியுடன் குழந்தைகளுடனும் அழகு குத்தியும் பூக்குழி இறங்கினர் நிறைவாக மணிகண்டன் என்பவர் 21 அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினார் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் சோழவந்தான எஸ் எஸ் கே ஜெயராமன், வாடிப்பட்டி மு. பால்பாண்டி, கோவில் செயல்அலுவலர் இளமதி, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், பேரூராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன், ஒன்பது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் சங்கங்கோட்டை கிராம தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார்,கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா, பெருமாள்,வசந்த் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சமயநல்லூர்டிஎஸ்பி ஆனந்தராஜ்,இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார்,தீயணைப்பு நிலையஅலுவலர் நாகராஜன் உள்பட தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். பூக்குழி நிறைவு பெற்றவுடன் அம்மன் பேருந்து நிலையம் பேரூராட்சி அலுவலகம் மார்க்கெட் ரோடு முத்துக்குமரன் நகை மாளிகை பெரிய கடை வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது ஆங்காங்கே பொதுமக்கள் ஜெனகை மாரியம்மனுக்கு பட்டுசேலை வழங்கி அம்மனை தரிசனம் செய்தனர் இரவு 7 மணிக்கு மேல் மந்தை திடல் அருகே அமைந்துள்ள கலையரங்கில் மாமன்னர்மருதுபாண்டியர் பேரவை சார்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!