17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!

பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!

எழுதியவர்: Baker BAker June 10, 2025, 10:33 am

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா புல்லந்தை கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் பூர்வீக விவசாய குடிகளாக இருந்து வருகிறார்கள் . கிராமத்தை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் நெல் விவசாயம் செய்ததில் பருவமழை தவறி பெய்த காரணத்தினால் கடந்த 2023 24 மற்றும் 202425 25 ஆம் ஆண்டு நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது

இந்நிலையில் இவர்கள் பயிர் காப்பீடு செய்ததால் அதற்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே கிராமத்தில் பக்கத்து வயல் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்ததாக இருப்பதால் அவர்களுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை இழப்பீடு வழங்குவதாகவும் பக்கத்து பக்கத்து வயல்வெளியில் உள்ளவர்களுக்கு வேறு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் இது தொடர்பாக விஏஓ , வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் ஆகியோரிடம் புகார் அளித்து எந்தவித பலனும் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளிப்பதற்காக வந்திருப்பதாக கூறினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!