மதுரை மாவட்டம்உசிலம்பட்டி
பேரையூர் சாலையில் வசித்து வருபவர் அரசு வழக்கறிஞர் ராமதாஸ் 46. இவருடைய மனைவி சைலாஜா 30. வழக்கறிஞர் மனைவி சைலாஜா அதே பகுதியில் வசிக்கும் தையல் தொழிலாளி அசோகன் அவருடைய மனைவி போதுமணி மகன் மகாராஜன் ஆகியோர் இடம் துணி தைக்க சென்ற போதுபழக்கம் ஏற்பட்டு வந்தது .இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் போதுமணி வழக்கறிஞர் ராமதாஸ் மனைவியிடம் சைலாஜாவிடம் கடந்த 2.7.2024 அன்று போதுமணி மகள் காது குத்து விழாவிற்கு நகை வேண்டும் எனக் கூறி 5 1/4 தங்க நகை இரவல் வாங்கி அணிந்து சென்றனர். காதுகுத்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திருப்பி தந்து விடுவதாகவும் கூறினார். இன்று வரை நகையை கேட்டும் திருப்பி தராததால் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திடம் வழக்கறிஞர் ராமதாஸ் மனைவி சைலஜா புகார் அளித்துள்ளார். இதன் பேரில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் தையல் தொழிலாளி அசோகன் மற்றும் அவருடைய மனைவி போதுமணி மற்றும் மகன் மகாராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். நகை மோசடியில் ஈடுபட்ட தையல் தொழிலாளி அசோகன் மகன் மகாராஜனை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் தங்க நகையை மதுரை ரோட்டில் உள்ள முத்தூட் நகை அடகு கடையில் அடகு வைத்ததாக தெரிய வருகிறது. இதன் பேரில் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டியில் நகையை இரவல் வாங்கிவிட்டு மீண்டும் திருப்பி தராத தம்பதியினர் கைது. மகன் தலைமறைவு
எழுதியவர்: mohan June 8, 2025, 4:26 pm




You must be logged in to post a comment.