17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.!

சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.!

எழுதியவர்: Baker BAker June 7, 2025, 11:04 am

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் சிறப்பு சொற்பொழிவை மௌலானா பிலால் முஹம்மது அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதுபோல

திருப்பத்தூரிலும் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில். ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதுபோல திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடை பயணமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் இந்த தொழுகை நடைபெற்றது. ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!