18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.!

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.!

எழுதியவர்: Baker BAker June 7, 2025, 10:44 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் 26 கூட்டமைப்பு இணைந்து ஈதிக மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தினர்

தமிழகம் முழுவதும் இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில்

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்

 பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் பரிமாறி

உற்சாகம் அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு, மகிழ்ச்சியோடுவாழ வேண்டும்

நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்

பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம் அதன்படி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்,மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் உணவு மற்றும் இனிப்பு வகைகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!