18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பட்டிவீரன்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, ரூ.11.500 அபராதம்!

பட்டிவீரன்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, ரூ.11.500 அபராதம்!

எழுதியவர்: Askar June 3, 2025, 8:51 am

பட்டிவீரன்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, ரூ.11.500 அபராதம்!

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே கோணம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு துரைப்பாண்டி என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ்மூர்த்தி(46) மற்றும் பழனிக்குமார் ஆகிய 2 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இன்று முதல் குற்றவாளியான கணேசமூர்த்திக்கு 15 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை, ரூ.11.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 2-ம் குற்றவாளியான பழனிக்குமார் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!