மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின்
வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் மின்னொளி மற்றும் ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடுகளை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்துள்ளனர் இன்று தொடங்கும் திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் தினசரி இரவு சாமி ஊர்வலம் மண்டகப்படி தாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னி சட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மந்தை களத்தில்பூக்குழியும் 17ஆம் தேதி காலை திரு த்தேரோட்ட நிகழ்ச்சியும் பதினெட்டாம் தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது திருவிழா சுவரொட்டி விளம்பரங்கள் போஸ்டர்கள் சோழவந்தான் மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா மூலம் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் இளமதி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதை ஒட்டி மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் வளாகம்
எழுதியவர்: mohan June 2, 2025, 9:46 am




You must be logged in to post a comment.