18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம்விழா.!

ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம்விழா.!

எழுதியவர்: Baker BAker June 1, 2025, 1:42 pm

திருவாடானை அருகே ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம் விழா. பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ராமதாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அ.கீழக்கோட்டை கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு

 ஒவ்வோர் நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது.

திருவிழாவான இன்று பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கருப்பசாமி கையில் அரிவாளுடன் பிள்ளையார் கோவிலில் இருந்து கரகம், மதுக்குடம், சந்தன குடம், பால்குடம், எடுத்து வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைத்து பக்தர்கள் நேற்றி கடன் செலுத்தும் விதமாக கிடாய், சேவல், கோழி, பலி கொடுத்தனர். பின்னர் அனைவருக்கும் அசைவ விருந்து அண்ணதானம் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!