மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து
காத்திருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சோழவந்தான் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர்பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும்போது நடைமேடையில் பெண் பயணி அமர்ந்திருந்ததை கவனிக்காமல் நடை மேடை அருகில் பேருந்தை நிறுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார் அப்போது நடைமேடையில் இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருந்த உமாவின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதாக தெரிகிறது இதனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பெண் பயணி உமா வலியால் துடித்துள்ளார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தற்போது பயணிகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டு வருகிறது ஆகையால் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
சோழவந்தானில்பயணியின் காலில் ஏறி இறங்கிய அரசு பேருந்து வலியால் துடித்த பெண்
எழுதியவர்: mohan June 1, 2025, 11:14 am




You must be logged in to post a comment.