17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.21 ஆயிரம் அபராதம்!

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.21 ஆயிரம் அபராதம்!

எழுதியவர்: Askar May 30, 2025, 8:45 am

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.21 ஆயிரம் அபராதம்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அய்யலூர், S.K.நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(41) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், முத்துக்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.21ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!