17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராபர்ட் புரூஸ் எம்பியிடம் ரயில் கோரிக்கையை வலியுறுத்திய வியாபாரிகள் சங்கத்தினர்..

ராபர்ட் புரூஸ் எம்பியிடம் ரயில் கோரிக்கையை வலியுறுத்திய வியாபாரிகள் சங்கத்தினர்..

எழுதியவர்: Abubakker Sithik May 29, 2025, 9:50 am

தென் பொதிகை வியாபாரிகள் சங்கம் சார்பில், முக்கிய ரயில் கோரிக்கைகள் அடங்கிய மனு நெல்லை எம்பியிடம் அளிக்கப்பட்டது. அதில் ரவண சமுத்திரத்தில் தாம்பரம், ஈரோடு, பாலருவி செல்லும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், ரயில்வே கேட் அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய ரயில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டி தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் அப்துல் காதர், துணைத் தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ், ஆகியோர் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

 

அந்த மனுவில், முதலியார் பட்டி, திருமலையப்பபுரம் பகுதிகளில், வியாபார ஸ்தலங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போக்கு வரத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே முதலியார் பட்டி ரயில்வே கேட் அருகிலும், ரவண சமுத்திரம் விலக்கு பகுதியிலும், உயர் மின் கோபுர விளக்கு அமைத்துத் தருமாறும், ரவண சமுத்திரம் ரயில் நிலையத்தை சுற்றி, ரவண சமுத்திரம், பொட்டல் புதூர், முதலியார் பட்டி, வீரா சமுத்திரம், மாலிக் நகர், தர்மபுரம் மடம், மீனாட்சி புரம், கோவிந்தப் பேரி, மந்தியூர், உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் உள்ள பெரும்பாலும், வெளி ஊர்களிலும், வெளி மாநிலங்களிலும், வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன் பெறும் பொருட்டும், வளர்ச்சி அடையும் பொருட்டும், தாம்பரம் ரயில், ஈரோடு ரயில், பாலருவி ரயில், உள்ளிட்ட ரயில்களை ரவண சமுத்திரம் ரயில் நிலையத்தில், நின்று செல்ல அனுமதி பெற்று தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!