17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டி தாலுகா ஆபீசில்கிராம பெண்கள் முற்றுகை

வாடிப்பட்டி தாலுகா ஆபீசில்கிராம பெண்கள் முற்றுகை

எழுதியவர்: mohan May 28, 2025, 8:18 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக இருதரவினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஒரு தரபினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி திருவிழா நடந்து முடிந்தது. அதுபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முளைப்பாரி வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது சம்பந்தமாக மதுரை ஆர்.டி.ஓ இரு தரப்பினரிடம் இந்து சமய அறநிலை தறை அதிகாரியை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி திருவிழாவை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். அதனால் வளர்க்கப்பட்ட முளைப்பாளிகையை கரைக்க அனுமதி கேட்டு வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டு கோரிக்கை எடுத்தனர். இது சம்பந்தமாக தாசில்தார் ராமச்சந்திரன் நீதிமன்ற முடிவு மற்றும் அறநிலையத்துறை பரிசீலனை செய்யும் முடிவுபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!