17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

எழுதியவர்: Baker BAker May 28, 2025, 6:08 pm

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது.

கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்திலும், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர், இன்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!