18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

எழுதியவர்: Baker BAker May 28, 2025, 6:06 pm

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோவிலுக்கு முன்பாக வரும் வாகனங்களை கோவில் பின்புறம் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!