17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் வைகாசி பொங்கல் திருவிழா.

உசிலம்பட்டியில் வைகாசி பொங்கல் திருவிழா.

எழுதியவர்: mohan May 26, 2025, 12:27 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள தில்லை நாயகபுரம் ஊரில் அருள் பாலிக்கும் மகா ஈஸ்வரி அருள் மிகு பத்திரகாளியம்மன் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் சிம்மவாகனத்தில் ஊர்வலம் மற்றும் இன்று காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மன் அருள் பெற்று சென்றனர். பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாரதனை மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!