17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை வீட்டில் இருந்தபடியே நீக்குவது எப்படி??

ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை வீட்டில் இருந்தபடியே நீக்குவது எப்படி??

எழுதியவர்: Askar May 26, 2025, 9:20 am

ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை வீட்டில் இருந்தபடியே நீக்குவது எப்படி??

ரேஷன் கார்டில் இறந்தவர்களின் பெயர்களை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே நீக்கலாம். எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை எந்த அலுவலகத்துக்கும் நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும்.

இதற்கு உங்களிடம் மொபைல் அல்லது லேப்டாப் இருந்தால் போதும். அந்தவகையில் இன்று ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் இருந்து இறந்தவர்களின் பெயரை நீக்குவது எப்படி? என தெரிந்து கொள்வோம்.

நீங்கள் ரேஷன் கார்டில் ஒருவரது பெயரை நீக்க வேண்டும் என்றால் https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். யாருடைய பெயரையாவது மாற்ற வேண்டும், சேர்க்க வேண்டும் என்றால் கூட இந்த வெப்சைட் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். இந்த ஆப்சன் கீழ் புதிய உறுப்பினரை சேர்க்க, உறுப்பினரின் பெயர் நீக்கம் ஆப்சனும் இருக்கும்.

அதில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். அப்போது நீக்கம் குறித்து தகவலை தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் இணையதளத்தில் இணைக்க வேண்டும். உதாரணமாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால் உங்களுக்கு ஒரு ரெஜிஸ்டர் எண் கொடுக்கப்படும். அதை வைத்துதான் உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்ட்டில் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் செய்யப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து உடனடி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!