17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

எழுதியவர்: Askar May 26, 2025, 9:07 am

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!