17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி..

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி..

எழுதியவர்: Askar May 25, 2025, 10:11 pm

நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி..

மதுரை, போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) ஆகிய இருவரும்  இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  வத்தலக்குண்டு சாலையில் உள்ள  தியாகராஜா மில் அருகே வந்து கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த காவலர் கணபதி உயிரிழந்தார். இவரது மனைவி சங்கீதா படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!