17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…

போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…

எழுதியவர்: Baker BAker May 24, 2025, 5:15 pm

‘போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி தாலுகா பெருநாழியில் செயல்பட்டு வரும் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கம் (பதிவு எண் – 137/2021) கல்விச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இன்று (மே 24, 2025) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய தலைவராக K. பாலமுருகன், செயலாளராக P. முத்துக்குமார், மற்றும் பொருளாளராக A. ஜெகதீஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல், சங்கத்தால் நடத்தப்படும் பெருநாழி சத்திரிய இந்து நாடார் பள்ளிகள் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகளும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவராக ஜெ. பழனிக்குமார், செயலாளராக எம். பெத்துராஜ், மற்றும் பொருளாளராக ஏ. ஜெகதீஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், உற்சாக வரவேற்பையும் அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!