18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!

நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!

எழுதியவர்: Baker BAker May 23, 2025, 10:45 pm

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அண்ணாமலைநகரில், மணிமுத்து (65) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன.

இன்று காலை தனது ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவிட்டு வெளியே சென்றிருந்த மணிமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, நாய்கள் ஆடுகளைக் கடித்து குதறியதைக் கண்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டியடித்ததால் நாய்கள் ஓடிவிட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்பகுதியில் நாய்கள் ஆடுகளைத் தாக்குவது தொடர் கதையாகி வருவதால், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!