17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா .!

ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா .!

எழுதியவர்: Baker BAker May 23, 2025, 10:39 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கிராமப் பொதுமக்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.

அதன்பிறகு கோவில் மூலவரான பாலமுருகன் சுவாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!