18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே ரிஷபம் ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது

சோழவந்தான் அருகே ரிஷபம் ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேக விழா நடைபெற்றது

எழுதியவர்: mohan May 14, 2025, 6:57 pm

.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் அருள்மிகு ஸ்ரீ சோனை சாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோ பூஜை செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ராக்காயி அம்மன் , பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு பால் ,தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரிஷபம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!