17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் குறைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மணல் ஜல்லி விலையை குவாரி உரிமையாளர்கள் குறைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

எழுதியவர்: mohan May 9, 2025, 11:42 am

தமிழகத்தில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான எம் சாண்ட் பீ சாண்ட் மணல் மற்றும் ஜல்லி; விலையை; குவாரி உரிமையாளர்கள் சமீபத்தில் ரூபாய் ஆயிரம் அதிகமாக உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் இவ்விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக என கருதிய தமிழக அரசு ரூ.1000 விலை குறைவாக வழங்கச் சொல்லி குவாரி உரிமையாளர்;களுக்கு உத்தரவிட்டது. ஆனால் குவாரி உரிமையாளர்கள் விலையை குறைக்காமல் அரசாங்க உத்தரவு தங்களுக்கு வரவில்லை எனக்கூறி புதிய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது . ஆனால் கடந்த ஒரு மாத காலமாக கட்டுமான பணிகள் சரிவர நடக்கவில்லை என கூறப்படுகின்றது. தமிழக அரசு கனிம பொருட்களுக்கு விலை குறைப்பு செய்ததை கடைபிடிக்க கோரி உசிலம்பட்டி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் அழகுமாரி மதுசூதனன் மற்றும் நிர்வாகிகள் பிரபு ஆர் ஆர் ரகு சௌந்தர் கணேசன் கிரசர் மற்றும் குவாரி கனிம பொருட்கள் விலை ஏற்றத்தினால் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டிட பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி குவாரி உரிமையாளர்கள் தமிழக அரசு நிர்ணித்த விலையில் எம் சாண்டு மற்றும் பி சாண்டு ஜல்லியை வழங்க வேண்டும் குறைக்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

   
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!