17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

எழுதியவர்: Askar May 8, 2025, 9:12 am

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!

(ஒரு சிறிய தொடர்)

வஃக்ப் புரிதல் -20

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு உயர்நீதி மன்றங்களில் வஃக்ப் தொடர்பான 120 க்கு‌ மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன் விளைவாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது.

நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களில் ஜெயின்,சீக்கியர் மற்றும் மற்ற சிறுபாண்மை உள்ளிட்ட பிற மதத்தினருக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது.

இது முஸ்லிம்களின் தனிப்பட்ட பிரச்சினை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் BBC ஹிந்திக்காக பேசும்போது, தாக்கல் செய்யப்பட்ட 120 மனுக்களில் 15 மனுக்கள் மட்டுமே முஸ்லிம்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்,

இதுபோன்ற அறக்கட்டளைகள் மதம் சார்ந்து இயங்கக் கூடாது என்று பாசிச வாதிகளின் குரலில் பேசி உள்ளார்.

இவர்களுக்கும் மற்றும் பொது சமூகத்திற்கும் வஃக்ப் என்பது முஸ்லிம்களின் சொத்து என்பதையும் , அது பொதுவானதல்ல என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

அரசியல் ஆய்வாளர் குர்பான் அலி,இது பிரதான வஃக்ப்பின் நிலங்களை அரசு கையகப்படுத்தும் முயற்சி என்று விவரித்தார்.

இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை படிக்கும் எவருக்குமே அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க முடியாது.

ஏனெனில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள

அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், மிகப்பெரிய முக்கிய ஆளுமைகளின் அலுவலகங்கள், வீடுகள் போன்ற ஏராளமான சொத்துக்கள்,

வஃப்பிற்கு சொந்தமானது என்றும், அது முறைகேடாக விற்கப்பட்டோ அல்லது ஆக்ரமிக்கப்பட்டோ உள்ளது எனவும்,

அவைகளை முறையாக ஆய்வுகள் செய்து மீட்க வேண்டும் என்றும், முஸ்லிம்கள் , அறிவுஜீவிகள், நடுநிலையாளர்கள் இடமிருந்து வலுவான குரல்கள் உரத்து ஒலிக்க துவங்கி உள்ளன.

இதுபோன்ற நிலையில் வஃக்பின் ஏராளமான சொத்துக்களை உரிமையாக்கி கொள்ளவே இந்த‌ மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக குரல்கள் எல்லா மட்டங்களிலும் ஒலிக்க துவங்கி உள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரவூப் ரஹீம் BBC யிடம் பேசிய போது, அடிப்படையில் இப்போது உள்ள சட்டத்தில் சில பிரிவுகளை சேர்ப்பது,

மற்றும் வஃக்ப் வாரியத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவது, போன்றவை தவிர எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றார்.

இதுபோன்ற பல உள்நோக்கங்கள் இந்த மசோதாவின் பின்புலத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இவைகளை எல்லாம் முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் சமூகமும், முன்னெடுத்து பொதுவெளிக்கு கொண்டு சென்றால்தான் பொது சமூகத்தின் ஆதரவுகளை பெற்று மசோதாவை எதிர்த்து வீரியமாக களமாட முடியும்.

வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்…!

கவிஞர்,கப்ளிசேட்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!