18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » முன்பதிவு பயணச்சீட்டு வழங்க முழுநேர அதிகாரியை நியமித்திடுக!

முன்பதிவு பயணச்சீட்டு வழங்க முழுநேர அதிகாரியை நியமித்திடுக!

எழுதியவர்: Abubakker Sithik May 6, 2025, 1:19 am

பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு வழங்க முழுநேர அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் சங்க செயலாளர் ஜெகன், சென்னையில் உள்ள தென்னக இரயில்வே தலைமை அலுவலகத்தில் முதுநிலை வணிக மேலாளர் பி.வி.மனோஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

 

அந்த மனுவில், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்திற்கு முன்பதிவு பயணச் சீட்டு வழங்க முழு நேர அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் (commercial clerk) என்ற முக்கிய கோரிக்கை வலியுறுத்தப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட தென்னக ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் மனுவினை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!