17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நெல்லையில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம்..

நெல்லையில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம்..

எழுதியவர்: Abubakker Sithik May 5, 2025, 1:55 pm

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் இரண்டாம் நிலை (Vacation Hobby Courses Batch II) 2025 ஒன்றை வருகின்ற மே 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை தாமாக செய்து கற்கும் அறிவியல் மாதிரிகள் (DIY – Science Kits) என்னும் தலைப்பில் VI std முதல் VIII std முடித்திருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

 

இந்த பயிற்சி வகுப்பில் செய்து கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கபடுகிறது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 600.00 ஆகும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அறிவியல் மையத்தில் இலவசமாகவும், அறிவிப்பு போஸ்டரில் உள்ள QRcode-ஐ ஸ்கேன் செய்து, பூர்த்தி செய்து முன்பதிவு செய்ய வேண்டும். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு [email protected] / என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 9442994797 (whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!