17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் வாரச்சந்தை அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம்

எழுதியவர்: mohan May 3, 2025, 8:16 pm

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் 5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்த பணியானது சுமார் 10,000 க்குமமேற்பட்ட பொதுமக்கள் கூடும் பாலமேடு வாரச்சந்தை நடைபெறும் மையப் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் எந்த நேரமும் விபத்து ஏற்பட்டு பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர் வாரச்சந்தையை பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் மிக ஆபத்தான நிலையில் தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருவதால் விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு உயிர் சேதம் ஏற்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!