18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » குற்றவாளிகள் நான்கு பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்..

குற்றவாளிகள் நான்கு பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik April 26, 2025, 7:59 am

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சிவகிரி மேற்கு ரத வீதியைச் சேர்ந்த சுப்பிர மணியன் என்பவரின் மகன் கவில் குமார் (25), மானூர் சுப்பையா புரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவன் மகன் பொன் பாண்டி (20), கடையநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான சென்னை ஆதம் பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தீபக் (24) மற்றும் ஆலங்குளம் காவல் நிலைய வழிப்பறி வழக்கின் குற்றவாளியான ஆலங்குளம் இசக்கிமுத்து என்பவரின் மகன் முத்து ராமன் (25) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!