18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு..

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு..

எழுதியவர்: Askar April 22, 2025, 7:20 pm

திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி பரபரப்பு தீர்ப்பு..

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பஞ்சம்பட்டியை சேர்ந்த கேத்தேஸ்ராஜா(19) என்பவரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி  கேத்தேஸ்ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!