18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!

எழுதியவர்: Askar April 21, 2025, 5:15 pm

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க போப் பிரான்சிஸ் காலமானார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!