18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..

எழுதியவர்: Abubakker Sithik April 18, 2025, 4:13 pm

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் (30.012023) முதல் செயல்பட்டு வருகிறது.

 

தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 1299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணி இடங்களுக்கான தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு 03.05.2025 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20-30 ஆகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களை https: //tnusrb.tn.gov.in/ என்ற இணையத் தளத்தில் அறியலாம். இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (23.04.2025) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

 

மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாட குறிப்புகள் https:// tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் போட்டித் தேர்வுகள் குறித்து தகவல்களை பெற TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel இல் இணைந்து கொள்ளலாம்.

 

இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!