17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik April 11, 2025, 5:33 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஒன்றிய மோடி அரசால் கொண்டு வரப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கருப்பு பேட்ஜ் அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் பாபநாசபுரம் அவுலியா முகைதீன் குத்பா பள்ளிவாசலில் தொழுகை நடத்திய பிறகு ஊர் பொது மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவுலியா முகைதீன் குத்பா பள்ளிவாசல் தலைவர் முகமது இஸ்மாயில் என்ற இக்பால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பீர் முகைதீன், செயலாளர் காதர் ஒலி, துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் அப்துல் ரகுமான், கௌரவத் தலைவர் சிலார் முகமது, கௌரவ ஆலோசகர் சிந்தா மதார், கலீல் ரகுமான் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!