18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

எழுதியவர்: Baker BAker April 11, 2025, 7:48 am

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றுக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை திருப்புல்லாணி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பற்றி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நடத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்களையும், அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும் பற்றி எடுத்துரைத்தனர்

விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கு, தங்களுடைய ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, மற்றும் நில பட்டா போன்ற ஆவணங்களை திருப்புல்லாணி வேளாண்மை விரிவாக்கம் மையத்திலும், தங்களது ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முகாமிலும் , பொது இ சேவை மையங்களிலும் பதிவு செய்து

விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெருக்கூத்து வாயிலாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் செல்வம் விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்வதின் பயன்களையும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உட்பட பல கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!