18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan April 10, 2025, 5:34 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது
பூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் உச்சமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது முளைப்பாரி ஊர்வலத்துடன் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி குழும தலைவர் மணி முத்தையா கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணிமுத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!