18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புகார்..!

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புகார்..!

எழுதியவர்: Baker BAker April 8, 2025, 6:46 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது இங்கு 60 லட்சம் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளிக்கு அதங்குடி, நெய்வயல், அல்லிக்கோட்டை, இளங்குன்றம், டி நாகனி, மாவிளங்கை, பூவாணி மற்றும் சாந்திபுரம், ஒரிக்கோட்டை சின்ன ஓரிக்கோட்டை சேந்தனி பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

ஆனால், பள்ளிக்கு அருகே பேருந்து நிறுத்தம் இருந்தும் இங்கு நிழற்குடை இல்லை. இதனால் மழை காலங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நனைந்து கொண்டே நின்று பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கு தேவையான நூலகம்,மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பொழுது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!