சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வடக்கு
வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இந்த சீர்வரிசை சங்கத்திலிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கோவிலில் வந்து அடைந்தது. இதை உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, திருநாவுக்கரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ்ரேகா ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் எம் கே முருகேசன், ஐயப்பன், முன்னாள் சங்கத்தலைவர் ராஜ்குமார், கொடிக்கால் விவசாய சங்க நிர்வாகிகள் முருகேசன், திரவியம்,உமாசங்கர் உள்பட உறவின்முறை சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வடக்கு தெரு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர்
எழுதியவர்: mohan April 5, 2025, 10:57 am




You must be logged in to post a comment.