18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..

எழுதியவர்: Askar March 25, 2025, 10:22 pm

டில்லி சென்றுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.

வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஓராண்டு உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.ஆளும்கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுகள் தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., என்ன செய்ய உள்ளது என்பதும் தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., டில்லி சென்றார். டில்லியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ்., கட்சியின் தலைமை அலுவலகத்தை பார்வையிட வந்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இரவு 8 மணிக்கு மேல் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அ.தி.முக., மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!