17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்..

தென்காசியில் இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்..

எழுதியவர்: Abubakker Sithik March 21, 2025, 3:40 pm

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி, பணி மற்றும் சிகிச்சைக்குச் செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் (22.03.2025) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

 

இலவச பஸ் பாஸ் தேவைப்படும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள், இலவச பஸ் பாஸ் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், வாக்காளர் அட்டை-நகல் புகைப்படம்-5 மற்றும் பள்ளி, கல்லூரி, பணி மற்றும் சிகிச்சைக்குச் செல்வதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!