17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி பி.எட் கல்லூரியில் மகளிர் தின விழா..

இலஞ்சி பி.எட் கல்லூரியில் மகளிர் தின விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 12, 2025, 10:53 am

இலஞ்சி டி.எஸ். டேனியல் பி.எட் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானு ப்ரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்.

முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி வரவேற்றார். தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானு ப்ரியா சிறப்புரையாற்றி பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார்.  பேராசிரியர்கள் ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரின், உடற்கல்வி ஆசிரியர் ஜசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின் அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!