17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடந்த முயன்ற 2கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடந்த முயன்ற 2கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2018, 2:37 am
இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள கடற்பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் இலங்கையில் இருந்து இராமமேஸ்வரத்திற்கும் – இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கும் போதை பொருட்கள், மாத்திரைகள், கடல் அட்டை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட  பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகின்றது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வழக்கம் போல் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யாழ்ப்பாணம் அருகேயுள்ள   பேசாலை பகுதியில் இருந்து இராமேஸ்வரத்தை நோக்கி சந்தேகத்திற்குறிய முறையில்  ப்ளாஸ்டிக் படகு ஒன்று சென்று கொண்பிருந்தது.
இதனையடுத்து அந்த படகை நிறுத்தி சோதனை செய்த இலங்கை கடற்படை, படகில்  மறைத்து வைக்கப் பட்டிருந்த 100 கிராம் மதிப்புள்ள 26 எண்ணிக்கையிலான சுமார்   2கோடி மதிப்புடைய  2.6 கிலோ கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும்.
இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்,  கடத்தல்காரர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!