தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு காரைக்குடி அரசுபொது தலைமை மருத்துவமனையில் பாவை அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருள் தாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காரைக்குடி மூத்த வழக்கறிஞர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு சமுதாயத்தில் பெண்கள் சந்திக்க கூடிய சவால்கள் பற்றியும் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் உரை ஆற்றினார். மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்துவோம் என்னும் கருத்தை வலியுறத்தும் விதமாக மனிதசங்கிலி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வினை ஐசிடிசி ஆற்றுனர். ஜெயசீலன் மற்றும் பாவை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் பிடோலின் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தேசிய மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்வு.!
எழுதியவர்: Baker BAker March 8, 2025, 11:41 pm




You must be logged in to post a comment.