17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவகோட்டையில் வெறிநாய் கடித்து அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் காயம் .!

தேவகோட்டையில் வெறிநாய் கடித்து அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் காயம் .!

எழுதியவர்: Baker BAker March 8, 2025, 7:23 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை வெறி நாய் ஒன்று தொடர்ச்சியாக காலில் கடித்து விட்டு தப்பி ஓடியது . இதில் தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் முத்தழகு (55) வினோத்குமார் (19) அர்ஜுனன் (55)அன்பரசன் (52) வீரசேகரன் (43) நிகேதன் (23) பகுருதீன் (60) விஜயா (38) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் சென்ற நபர்களை தொடர்ச்சியாக கடித்த வெறிநாயை பிடிப்பதற்கு தேவகோட்டை நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!