18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…

மேட்டுப்பாளையத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…

எழுதியவர்: Baker BAker March 1, 2025, 4:15 pm

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா…

மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் நகர காவல் ஆய்வாளர் சின்னக்காமன் கலந்து கொண்டு பேசுகையில் இன்றைய தலைமுறை பணம் சம்பாதிப்பதோடு மட்டுமின்றி சேமிக்கவும் வேண்டும், அஞ்சல் துறையின் காப்பீடு மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு முறைமைகள் குறித்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிகாட்டுதல் என்னென்ன என்பதையும் கவனமாக வாகனம் ஓட்டுவது மேலும் நம்பிக்கை மிகுந்த இந்திய அஞ்சல் துறை அஞ்சலகத்தில் சேமிப்புக்கு பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன அனைத்து பொது மக்களும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றார். இவ்விழாவில் காந்தியடிகள் காவலர் விருது பெற்ற மேட்டுப்பாளையம் நகர காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் அலுவலர் தவநாதன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் திரளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் ஜீவிதா சிசி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!