17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik February 26, 2025, 7:51 pm

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில், பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!