மதுரை மாவட்டம் ராஜமான்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் பகுதி பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்
ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
எழுதியவர்: mohan February 17, 2025, 1:09 pm




You must be logged in to post a comment.